Home /News /sports /

இந்தியாவுக்கு எதிராக கலக்க வருகிறார் மும்பை இந்தியன்ஸின் சரவெடி மன்னன் டிம் டேவிட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக கலக்க வருகிறார் மும்பை இந்தியன்ஸின் சரவெடி மன்னன் டிம் டேவிட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

டிம் டேவிட்

டிம் டேவிட்

முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியாவுக்கு எதிராக கலக்க வருகிறார் மும்பை இந்தியன்ஸின் சரவெடி மன்னன் டிம் டேவிட், இந்தியாவுக்கு எதிரான மற்றும் உலகக்கோப்பை டி20க்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு  2022 ஐபிஎல் போட்டிகளில் கடைசியில் இறங்கி செம சாத்து சாத்தியெடுத்த டிம் டேவிட் ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பை அணியிலும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸின் மலைமனிதன் டி20 அதிரடி மன்னன் டிம் டேவிட் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆடுகிறார்.

டிம் டேவிட் சிங்கப்பூர் வீரர், ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு ஆடுகிறார், இவர் உலகம் முழுதும் டி20 லீகுகளில் தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தை தன் அதிரடி மூலம் ஈர்த்தவர். மிகவும் நல்ல ஸ்ட்ரைக்கர். ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 8 நாடுகள் நேரடியாக 'சூப்பர் 12' சுற்றில் விளையாடுகிறது.

இதையும் படிக்க: டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா பாய்ச்சல்

முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டி20 உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பை அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கேன் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஹேசில்வுட், ஜோஸ் இங்லிஸ், மேக்யூ வேட், ஆடம் ஜாம்பா, டிம் டேவிட்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி:ஆரோன் பின்ச் (கே), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் ஆகர், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், கேன் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா..
இவ்வாறு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Australia, Mumbai Indians, T20 World Cup

அடுத்த செய்தி