சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி

அதனையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி சார்பில் மனிஷ் பாண்டேவும் முகமது நபியும் களமிறங்கினர். பும்ரா பந்து வீசினார்.

சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி
மும்பை அணி
  • News18
  • Last Updated: May 3, 2019, 12:13 AM IST
  • Share this:
ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை அணியும் ஹைதராத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விரித்திமான் சாஹா 25 ரன்களும், மார்டின் குப்டில் 15 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் அடுத்ததடுத்து ஆட்டமிழந்த நிலையில், மனிஷ் பாண்டே மட்டும் நிதானமாக ஆடினார். இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய 47 பந்துகளில் 71 ரன்கள் குவித்து களத்தில் நின்றார். இறுதி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது.


அதனையடுத்து, மேட்ச் டிராவானது. அதனையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி சார்பில் மனிஷ் பாண்டேவும் முகமது நபியும் களமிறங்கினர். பும்ரா பந்து வீசினார். சூப்பர் ஓவரில் 4 பந்துகளில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழந்து வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்த மும்பை அணியின் சார்பில் ஹர்திக் பாண்டியாவும், பொல்லார்டும் களமிறங்கினர். ஹைதராபாத் அணியில் ரஷித் பந்து வீசினார். முதல் பந்திலேயே பாண்டியா சிக்ஸ் அடித்து அசத்தினார். பின்னர், மூன்று பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது அணியாக ப்ளேஆப்புக்குள் மும்பை அணி நுழைந்தது.




Also see:

First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading