#CSKvMI கடைசி ஓவர் பரபரப்பு; ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை

26 ரன்கள் எடுத்திருந்த குர்ணால் பாண்டியா பந்தில் டூபிளிஸிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பதி ராயுடு, 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

#CSKvMI கடைசி ஓவர் பரபரப்பு; ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை
மும்பை அணி வீரர்கள்
  • News18
  • Last Updated: May 12, 2019, 11:38 PM IST
  • Share this:
சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. 

ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சனும், டூபிளிஸிஸும் களமிறங்கினர். வாட்சனும், டூபிளிஸிஸும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த குர்ணால் பாண்டியா பந்தில் டூபிளிஸிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பதி ராயுடு, 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மறுபுறம், வாட்சன் நிதானமாக ஆடி வந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த பிராவோ நிதானமாக ஆடினார். 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிராவோவும் ஆட்டமிழந்தார்.

Also see:

First published: May 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்