பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!

5-வதாக இறங்கிய ஹர்திக் பாண்டியா, இறுதியில் அதிரடியாக ஆடினார்.

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
5-வதாக இறங்கிய ஹர்திக் பாண்டியா, இறுதியில் அதிரடியாக ஆடினார்.
  • Share this:
பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை-பெங்களூரு அணிகள் மோதும் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை அணி.
பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.


அடுத்த மும்பை அணியின் தொடக்க வீரராக குயின் டி காக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் 28 ரன்களிலும், டி காக் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சூர்ய குமார் யாதவ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 5-வதாக இறங்கிய ஹர்திக் பாண்டியா, இறுதியில் அதிரடியாக ஆடினார்.

16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் மும்பை அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 10 புள்ளிகளைப் பெற்று மும்பை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

Also see: 
First published: April 15, 2019, 11:49 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading