Home /News /sports /

நாங்களும் மனிதர்கள்தான் தவறுகள் செய்வது இயல்பே - முகமது ரிஸ்வான் ஒப்புதல்

நாங்களும் மனிதர்கள்தான் தவறுகள் செய்வது இயல்பே - முகமது ரிஸ்வான் ஒப்புதல்

முகமது ரிஸ்வான்

முகமது ரிஸ்வான்

ஆசியக்கோப்பை இறுதியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தான் அணியில் அதிக ஸ்கோர் எடுத்த ரிஸ்வான், தாங்கள் அணி இறுதிப்போட்டியில் தவறுகள் செய்ததை ஒப்புக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaDubaiDubaiDubai
ஆசியக்கோப்பை இறுதியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தான் அணியில் அதிக ஸ்கோர் எடுத்த ரிஸ்வான், பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் தவறுகள் செய்ததை ஒப்புக் கொண்டார்.

ஆட்ட நாயகன் பனுகா ராஜபக்ச 46 ரன்களில் இருந்த போது கேட்சை விட்டது பாகிஸ்தான், அவர் தன் அதிரடி வேலையைக் காட்டி விட்டுச் சென்றார். பிறகு ரிஸ்வான் கிரீசில் இருந்தும் வெற்றிக்கான ரன் விகிதம் எகிறியது, ஆனால் ரிஸ்வான் ஒன்றுமே செய்யவில்லை, 17வது ஓவர் வரை நின்ற அவர் கடைசியில் அவுட்டும் ஆகிச்சென்றார்.

இதோடு இலங்கை அணி 58/5 என்று இருந்த போது பாகிஸ்தான் நசுக்கியிருக்க வேண்டும் ஆனால் எழும்பவிட்டனர். இதனால் 170 ரன்கள் எடுத்தனர் இலங்கை அணியினர்.

இது தொடர்பாக ஆட்டம் முடிந்தவுடன் முகமது ரிஸ்வான் கூறியதாவது:
நாங்கள் தவறுகள் செய்தோம், ஆனால் நாங்களும் மனிதர்கள்தான். தொடர் முழுதும் சிறப்பாகவே ஆடினோம். முதலில் இலங்கை பேட் செய்யும் போது எங்கள் பக்கம் இருந்த மொமெண்டம் பிறகு மாறிவிட்டது. ஒரு இன்னிங்ஸ் முடிவில் எந்த அணி நல்ல மொமெண்டமில் உள்ளதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என்பது டி20 கிரிக்கெட்டின் உள்ளார்ந்த விதி.

இதையும் வாசிக்க: பாகிஸ்தான் தோல்வியை ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிய ஆப்கான் ரசிகர்கள்

டாஸ் வென்ற அணி வெற்றி பெறும் என்பதெல்லாம் ஒன்றுமில்லை, யார் டாஸை பற்றி யோசிக்கிறார்களோ அவர்கள் சாம்பியன் அணி கிடையாது. நாங்கள் டாசைப் பற்றி நினைக்கவில்லை, நாங்கள் செய்த தவறுகளுக்கு இலங்கை தண்டனை அளித்துள்ளது. சாம்பியன் ஆக தகுதி அவர்களிடத்தில் உள்ளது.
இவ்வாறு கூறினார் ரிஸ்வான்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Asia cup, Cricket, Pakistan Cricketer, Srilanka

அடுத்த செய்தி