இந்திய டி20 அணியில் தோனி இடம்பெறாதற்கு காரணம் இதுதான்!

Vijay R | news18-tamil
Updated: August 30, 2019, 3:15 PM IST
இந்திய டி20 அணியில் தோனி இடம்பெறாதற்கு காரணம் இதுதான்!
எம்.எஸ்.தோனி
Vijay R | news18-tamil
Updated: August 30, 2019, 3:15 PM IST
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெறாதது தான் மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளது.

38 வயதான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய ராணுவத்தில் 2 மாதங்கள் பயிற்சியில் ஈடுப்பட உள்ளதாக கூறி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகினார். ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனி, கேதர் ஜாதவ் உடன் கோல்ஃப் விளையாடி புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் டி20 தொடரில் தோனி ஏன் இடம்பெறவில்லை என்பதற்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிராசத் விளக்கமளித்துள்ளார். அதில் தோனி தேர்வுக்கு கிடைக்கவில்லை என்றுள்ளார்.

தோனி தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரது அடுத்த திட்டம் என்னவென்று தெரியாமல் உள்ளது. தேர்வு குழுவினரிடமும் அவர் எந்தவித முடிவும் அறிவிக்காததால் தோனியை தேர்வு செய்யவில்லை என தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் அவர் தொடர்ந்து நீடிப்பாரா? என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாட விருப்பப்படுவதால் முக்கியமான போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்த உள்ளதாகாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Loading...

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

Also Watch

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...