• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ள தோனிக்கு சம்பளம் எவ்வளவு?- பிசிசிஐ பொதுச்செயலாளர் பதில்

டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ள தோனிக்கு சம்பளம் எவ்வளவு?- பிசிசிஐ பொதுச்செயலாளர் பதில்

தோனி

தோனி

இந்திய டி20 உலகக் கோப்பை அணிக்கு மென்டாராக செயல்படும் தோனி அதற்காக பி.சி.சி.ஐயிடம் ஒரு ரூபாய் கூட ஊதியம் வாங்க மாட்டார் என்று ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

  • Share this:
    ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

    துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக வலம் வந்தாலும் வெற்றிகரமான கேப்டனாக இன்னும் உருவாகவில்லை. இதுவரை ஐசிசி சார்பில் ஒரு கோப்பையைக் கூட கோலி தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை.

    ஐசிசியின் கோப்பைகளை வெல்ல முடியாததன் காரணமாகவே இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கோலியால் உருவாகமுடியில்லை, இடம் பெறவில்லை. முக்கியமான தருணத்தில் மிகப்பெரிய வெற்றிகளை எவ்வாறு பெறுவது என்பது கோலிக்கு சிக்கல் நிறைந்ததாக இருந்து வந்தது. இதற்கிடையில் டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அதனையடுத்து, இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும், ஆல்டைம் ஃபேவரைட் கேப்டனாகவும் இருந்த தோனியை, டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கான ஆலோசகராக தோனியை பி.சி.சி.ஐ நியமனம் செய்தது.

    இந்த அறிவிப்பை, தோனியை சர்வதேச போட்டிகளில் பார்க்க முடியாது என்ற வருத்தத்தில் இருந்த தோனி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தநிலையில், இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி இருப்பதற்கு தோனி வாங்கும் சம்பளம் குறித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த பி.சி.சி.ஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா, ‘டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்கும் மகேந்திர சிங் தோனி ஒரு ரூபாய் கூட பி.சி.சி.ஐயிலிருந்து ஊதியம் பெறவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றும் சேவைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: