முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட்டில் 'MSD 07'.. மகளிர் ப்ரீமியர் லீக்கில் மாஸ் காட்டும் தோனி ரசிகை - வைரலாகும் போட்டோ

பேட்டில் 'MSD 07'.. மகளிர் ப்ரீமியர் லீக்கில் மாஸ் காட்டும் தோனி ரசிகை - வைரலாகும் போட்டோ

கிரண் நவ்கிரே

கிரண் நவ்கிரே

2011-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றதை பார்த்தேன். அதில் ஒரு பெரிய பெயர் இருந்தது அதுதான் தோனி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

'MSD 07' கடந்த சில நாள்களாக சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது இந்த எழுத்து. மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியின் தரிசனத்துக்காக இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.  ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியை காண ரசிகர்கள் காத்துகிடக்க மகளீர் பிரிமியர் லீக்கில் சம்பவம் பண்ணியிருக்கார் அவரது ரசிகை ஒருவர். 'MSD 07' என்ற வார்தை ட்ரெண்டிங்கில் இருப்பதற்கு இந்த முறை காரணமாகி இருக்கிறார் அவரது தீவிர ரசிகையான கிரண் நவ்கிரே.

தோனி-க்காக ஸ்டேடியத்தில் இருந்து அன்பை பொழியும் ரசிகர்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இந்த கிரண் நவ்கிரே வேற ரகம். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் யூபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் இவர் பயன்படுத்தும் பேட்டில் 'MSD 07' எனப் பொறிக்கப்பட்டுள்ளது இதுதான் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் பேட்டில் ஸ்பான்ஸர்களின் பெயர்கள் இருக்கும். கிரண் நவ்கிரே பேட்டில் தோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்சி நம்பரான 07 இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியை போன்றே பேட்டிங்கில் மிரட்டுகிறார் இந்த கிரண். குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரி மாறும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

Also Read:  நல்லவேலை கே.எல்.ராகுல் ஆடல.. கேரியரே காலி - ஸ்ரீகாந்த் விமர்சனம்

இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய கிரண் நவ்ரே, “ எனக்கு கிரிக்கெட் பிடிக்க காரணமே தோனி தான். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் பேட்டில் தோனியின் பெயரை பொறித்தேன். 2011-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றதை பார்த்தேன். அதில் ஒரு பெரிய பெயர் இருந்தது அதுதான் தோனி. 2011-ல் இருந்து தோனியின் ரசிகையானேன். எனக்கு மகளிர் கிரிக்கெட் என்று ஒன்று இருப்பதே தெரியாது. நான் ஆண்கள் கிரிக்கெட் போட்டியை தான் பார்த்து வந்தேன். எனது கிராமத்தில் ஆண்களுடனே கிரிக்கெட் விளையாடினேன். தோனி எனக்குள் தனிப்பட்ட முறையில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்” என்றார்.

First published:

Tags: Cricket, Mahendra singh dhoni, MS Dhoni, Tamil News