விக்கெட் கீப்பரில் நான் தான் பெஸ்ட்! மீண்டும் நிரூபித்த தோனி; வைரல் வீடியோ

ஸ்டெம்பிங் செய்வதில் தோனி வல்லவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது

விக்கெட் கீப்பரில் நான் தான் பெஸ்ட்! மீண்டும் நிரூபித்த தோனி; வைரல் வீடியோ
தோனி
  • News18
  • Last Updated: February 10, 2019, 10:02 PM IST
  • Share this:
நியூசிலாந்து அணியின் டிம் செய்பெர்ட்டை மின்னல் வேகத்தில் தோனி ஸ்டெம்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதன்மூலம்,  நான் தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் தோனி. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதையடுத்து 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி ஹேமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அந்த அணியின் டிம் செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.


கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது தோனி தான் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். ஸ்டெம்பிங் செய்வதில் தோனி வல்லவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதை இன்றைய போட்டியிலும் தோனி நிரூபித்துள்ளார். ஆட்டத்தின் 7.4-வது ஓவரில் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் டிம் செய்பெர்ட்டை வெளியேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருந்தும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 213 ரன்களை நிர்ணயித்தது நியூசிலாந்து அணிAlso watch

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்