தோனி விக்கெட் கீப்பராக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் பந்துவீசுவேன் என்று ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (ஜன.27) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பேட்டிங்கின்போது, கடைசி நேரத்தில் களமிறங்கிய கேதர் ஜாதவ், தோனியுடன் சேர்ந்து அதிரடியாக 22 ரன்கள் சேர்த்தார். இருவரும்கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால் ரன் எண்ணிக்கை 324 ரன்களாக அதிகரித்தது.
முதல் ஒரு நாள் போட்டியில் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் 2-வது ஒரு நாள் போட்டியில் ராஸ் டெய்லர் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை ஜாதவ் வீழ்த்தியிருந்தார். இதற்கு முக்கிய உதவியாக இருந்தவர் மகேந்திர சிங் தோனிதான்.
குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ் ஆகியோர் பந்துவீசும்போது ஸ்டம்புகளுக்கு பின்னால் இருக்கும் விக்கெட் கீப்பர் தோனி, கொடுக்கும் ஆலோசனைகள் விக்கெட்டை வீழ்த்தை பெரிய உதவியாக இருக்கிறது. இதனை கேதர் ஜாதவ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு முறை பந்துவீச வரும்போதும், நான் தோனியைப் பார்ப்பேன். அவரே நான் எங்கு, எப்படி பந்துவீச வேண்டும் என முடிவு செய்வார். நான் மூடிக்கொண்டு பந்துவீசினாலும் விக்கெட் எடுப்பேன்” என்று ஜாதவ் கூறியுள்ளார்.
msbehidthestumps from Not This Time on Vimeo.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
NZvIND: மின்னல் வேகத்தில் டெய்லரை அடிச்சு தூக்கிய ‘தல’ தோனி: கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian cricket team, Kedar Jadhav, MS Dhoni, NZvIND