தோனியின் 'சூப்பர் பாடி கார்ட்'... யார் இந்த லேடி? இணையத்தில் வைரலாகும் வீடியோ

தோனியின் 'சூப்பர் பாடி கார்ட்'... யார் இந்த லேடி?  இணையத்தில் வைரலாகும் வீடியோ
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பெண் ஒருவர் பாதுகாவலராக செயல்படும் வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகத் திகழ்ந்தவர் தோனி. இவரின் தலைமையின் கீழ் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார்..

இந்திய அணியில் தோனி இல்லையென்றாலும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைந்தபாடில்லை. தோனி குறித்த செய்திகள், புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவதே அதற்கு உதாரணம். அதேபோல் அவர் செல்லும் இடங்களிலும் அவருக்கு அமோக வரவேற்பும் எள்ளளவும் குறையாமல் இருந்து வருகிறது.


Also Read : பாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் பாட்டு பாடி மகிழ்ந்த தோனி

சமீபத்தில் மாகாராஷ்ர மாநிலம் புனேவில் ஒரு விளம்பர படத்தில் நடிக்க வந்த அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. தொடர்ந்து அவர்கள் தோனி, தோனி என்றும் உற்சாக மிகுதியில் முழக்கமும் இட்டனர். அப்போது திடீரென ஒரு பாதுகாவலர் போல் செயல்பட்ட பெண் ஒருவர் மற்ற பாதுகாவலர்களோடு இணைந்து தோனியை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்.


 
View this post on Instagram
 

90% Security 10% Hair 500% Fangirl #captainsaab #msdhoni #dhoni #sapnabhavnani #madowothair #dhonieverywhere


A post shared by सिंध जी शहज़ादी (@sapnamotibhavnani) on


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அவர் பெயர் சப்னா பவ்நானி என்பதும் அவர் தோனியின் தனிப்பட்ட சிகையலங்கார நிபுணர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.  தோனி மட்டுமல்லாமல் பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் சப்னா பவ்நானி சிகையலங்காரம் செய்து வருகிறார்.

Also Read : புதிய தொடக்க வீரர்கள், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்... இந்திய டெஸ்ட் அணி இதுதானா?

இந்நிலையில் தோனி ஷூட்டிங் வந்த நிலையில் அங்கு பெரும் கூட்டத்தால் குழப்பம் ஏற்படாமல் இருக்க சப்னா பவ்நானி தற்காலிக பாதுகாவலராக செயல்பட்டுள்ளார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “நான் தோனியின் 10 சதவீத சிகையலங்கார நிபுணர், 90 சதவீத பாதுகாவலர், 500 சதவீத ரசிகை“ என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading