தோனிக்கு 2-வது இடம்... முதலிடத்தில் இவரா?

பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 296 சிக்ஸர்களுடன் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

news18
Updated: March 27, 2019, 10:36 AM IST
தோனிக்கு 2-வது இடம்... முதலிடத்தில் இவரா?
தோனி
news18
Updated: March 27, 2019, 10:36 AM IST
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

12-வது ஐபிஎல் சீசன் தொடரின் 5-வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தவான் ஐபிஎல் போட்டிகளில் தனது 33-வது அரை சதத்தை அடித்தார்.


Loading...
சென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை வீரர் வாட்சன் நிதானமாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

போட்டியின் 18.5 ஓவரில் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். இதுவே இந்த ஐபிஎல் தொடரில் தோனி  அடித்த முதல் சிக்ஸர். இந்த சிக்ஸர் மூலம்
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார் தோனி. தோனி இதுவரை 187 சிக்ஸர்களை அடித்துள்ளார். பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 296 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்

கிறிஸ் கெயில் - 296
தோனி - 187
ஏ பி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா - 186
ரோஹித் சர்மா - 184
விராட் கோலி - 178
டேவிட் வார்னர் 163

‘கோ பாப்பா’ தோனியை உற்சாகப்படுத்திய மகள் ஸிவா


 

Also watch

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...