'ப்ளீஸ்... அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை மட்டும் கற்றுக்கொடுங்கள்...' சுஷாந்த் சிங்கை மறக்க முடியாத தோனியின் சிறுவயது கோச்

சுஷாந்த் சிங் தற்கொலை செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தாக கேஷவ் பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

'ப்ளீஸ்... அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை மட்டும் கற்றுக்கொடுங்கள்...' சுஷாந்த் சிங்கை மறக்க முடியாத தோனியின் சிறுவயது கோச்
நடிகர் சுஷாந்த் சிங்
  • Share this:
தோனியின் பேட்டிங் ஸ்டைல் குறித்து சுஷாந்த் சிங்கிற்கு கற்றுக் கொடுத்த அனுபவங்களை தோனியின் சிறுவயது கோச் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற வரலாற்று சிறப்புமிக்க காட்சியை, சற்றும் மாறமல் அப்படியே தத்ரூபமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங்.

தோனியின் ஷாட், நடை, பாவணை என அனைத்தையும் சுஷாந்த் சிங் கற்றுக்கொள்ள உதவியவர் தோனியின் சிறுவயது பயிற்சியளார் கேஷவ் பானர்ஜி. சுஷாந்த் சிங் மறைவு குறித்து அவர் கூறுகையில், “சுஷாந்த் மிகவும் ஜென்டிலான பாய். அனைவரிடமும் நன்றாக பழகுவார். அவர் உயிரிழந்த செய்தியை பார்த்தப் போது என்னால் நம்பவே முடியவில்லை.


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் ராஞ்சிக்கு வரும் போது நாங்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தோம். தோனியின் நண்பர்களும் உடனிருந்தார். அவர் எப்போதும் என்னிடம் ஒன்று கேட்பார். தயவுசெய்து தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை மட்டும் எப்படியாவது எனக்கு கற்றுக் கொடுங்கள் என்பார்.

மஹி விளையாடும் விதம், முக பாவனைகள் அனைத்திலும் கவனம் செலுத்தினார். அதனால் தான் அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது. அவர் நடித்த காட்சிகளில் தோனி போன்று இல்லை என்று சொல்ல முடியாது. இன்று எனக்கு அவரது நினைவுகள் மட்டுமே உள்ளது. நான் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறேன்“ என்றுள்ளார்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Also See:

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்

இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்


சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading