முகப்பு /செய்தி /விளையாட்டு / T20 World Cup 2021: பாவம்! தோனி என்ன செய்வார்? - கவுதம் கம்பீர் கருத்து

T20 World Cup 2021: பாவம்! தோனி என்ன செய்வார்? - கவுதம் கம்பீர் கருத்து

தோனி-கம்பீர்

தோனி-கம்பீர்

கேப்டனாக கோலியின் உத்திகள் மீது தனக்கு ஒருநாளும் நம்பிக்கை பிறந்ததில்லை என்கிறார் கவுதம் கம்பீர். இந்த மாற்றத்துக்குப் பின்னால் தோனி இருப்பார் என்று நான் கருதவில்லை என்றார் கம்பீர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் ரோகித் சர்மாவை 3ம் நிலைக்குத் தள்ளி, ராகுலையும் இஷான் கிஷனையும் இறக்கியதற்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம் என்று கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேப்டனாக கோலியின் உத்திகள் மீது தனக்கு ஒருநாளும் நம்பிக்கை பிறந்ததில்லை என்கிறார் கவுதம் கம்பீர். இந்த மாற்றத்துக்குப் பின்னால் தோனி இருப்பார் என்று நான் கருதவில்லை என்றார் கம்பீர்.

இந்திய அணி 2 தோல்விகளுடன் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய டி20 உலகக்கோப்பையில் இழந்து விட்டது என்றே கூற வேண்டும், இதனால் பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன, உண்மையான விமர்சனங்களை நெட்டிசன்கள்தான் வைக்கின்றனர், இந்த தோல்விகளுக்குக் காரணம் ஐபிஎல் கிரிக்கெட் தான்.

ஏனெனில் டி20 உலகக்கோப்பையை முன்னால் நடத்தி அதில் இந்தியா தோல்வி அடைந்தால் ஐபிஎல் கிளிக் ஆகாது என்பதற்காக கடும் உழைப்பும் வலிமையும் தேவைப்படும் ஐபிஎல் போட்டிகளை முன் கூட்டியே நடத்தி பணம் பண்ணுவதையே பிசிசிஐ குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கம்பீர் கூறியதாவது: “உத்தி வகையில் கோலி என்னை ஒருநாளும் திருப்தி செய்ததேயில்லை. ஞாயிறன்று அவர் மேலும் ஒரு ஏமாற்றத்தை அளித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்கக் கூட்டணியை எதற்காக மாற்ற வேண்டும்? அணியையும் மாற்றினார். எதற்காக? நான் தோனியுடன் நீண்ட காலம் ஆடியிருக்கிறேன், இது போன்ற திடீர் மாற்றங்களை அவர் ஒருபோதும் பிரேரணை செய்ய மாட்டார்.

மற்றவர்களும் கோலியின் முடிவுகளை கேள்வி கேட்க மாட்டார்கள், அதுதான்பிரச்சனை. மேலும் சோதி, சாண்ட்னர் உள்ளிட்ட நியூசிலாந்து பவுலர்கள் நன்றாக வீசினார்களா? அல்லது இந்தியா மோசமாக ஆடியதா என்பதும் எனக்கு கேள்வி இருக்கிறது. நான் எதிரணியை எப்போதும் பாராட்டவே செய்வேன், ஆனால் அன்று கோலி மற்றும் வீரர்கள் ஆடிய விதம் பவுலர்களை ஏதோ மாய மந்திரம் செய்வது போல் காட்டி விட்டது.

திட்டமிடல் இல்லை, ரோல் என்னவென்று திட்டமிடல் இல்லை. பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலை குறித்த முறையான மதிப்பிடல் இல்லை. மலை போல் ரன்களைக் குவிக்க வேண்டும் என்று பார்த்தனர். 170-180 என்று எண்ணீ 110 ரன்களுக்கு மடிந்தனர். ” என்றார்.

இன்று ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

First published:

Tags: Gautam Gambhir, MS Dhoni, T20 World Cup