• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல் தோனிக்கும் நடந்ததா?

மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல் தோனிக்கும் நடந்ததா?

எம்.எஸ்.தோனி (கோப்புப்படம்)

எம்.எஸ்.தோனி (கோப்புப்படம்)

Dhoni Was Refused Captaincy By BCCI Administrator | மகளிர் அணித் தேர்வைப் போல், ஆடவர் அணித் தேர்விலும் சிலர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய அணியில் இருந்து மிதாலி ராஜ் நீக்கப்பட்டதைப்போல் ‘தல’ தோனிக்கு கேப்டன்ஷி கொடுக்கும் விவகாரத்திலும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

    2018-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ‘சூப்பர்-4’ போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். தோனி தலைமையில் 200-வது போட்டியில் களமிறங்கிய இந்திய அணி ‘டிரா’ செய்தது. ஆனால், அவர் கடந்த 2017-ம் ஆண்டே ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிவிட்டார்.

    MS Dhoni
    மைதானத்தை விட்டு வெளியேறும் தோனி (BCCI)


    ஆசியக் கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு கேப்டன்ஷி கொடுக்க, ரோஹித் மற்றும் அந்த தொடரின் துணைக்கேப்டன் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகே, தோனி கேப்டனாக களமிறங்கினார்.

    மகளிர் டி-20 அணியில் இருந்து மிதாலி ராஜ் நீக்கப்பட்டதைப்போல், தோனிக்கு கேப்டன்ஷி கொடுக்கும் விவகாரத்திலும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறது. மகளிர் அணி தேர்வைப் போல், ஆடவர் அணித் தேர்விலும் சிலர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



    தோனிக்கு 200-வது போட்டிக்கான கேப்டன்ஷி வழங்கப்பட்டபோது பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு திருப்தி இல்லை என்று கூறப்பட்டது. தற்போது, மிதாலி ராஜ் கூறிய குற்றச்சாட்டுகள் மூலம், அந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: