லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய மகேந்திர சிங் தோனி! - வீடியோ

இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் சென்ற தோனி அங்கிருந்த ராணுவ வீரர்கள் மத்தியல் உரையாற்றி உள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: August 15, 2019, 1:46 PM IST
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய மகேந்திர சிங் தோனி! - வீடியோ
மகேந்திர சிங் தோனி - லடாக்
Vijay R | news18-tamil
Updated: August 15, 2019, 1:46 PM IST
நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்.

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கார்னலாக இருக்கும் மகேந்திர சிங் தோனி 2 மாத காலம் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் உள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் ராணுவ பயிற்சியில் ஈடுப்பட இருந்ததால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார். இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற்று, தற்போது விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் உள்ளார்.


இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் சென்ற தோனி அங்கிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார். ராணுவ வீரர்களும் தோனியை உற்சாகமாக வரவேற்று உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







லடாக்கில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்ற தோனி அங்கிருந்த மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றி உள்ளார். முன்னதாக ராணுவ ஜெனரல் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளார்.

Also Watch

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...