இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, தனது சொந்த ஊரில் தர்பூசணி விவசாயத்தில் ஈடுபடும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு அணியில் இடம் பெறாமல் உள்ளார்.
தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தாலும் அவர் குறித்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பிட்சை சரிசெய்யும் வண்டியை ஒட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
தற்போது தனது சொந்த ஊரில் தர்பூசணி விவசாயத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தோனி ஊதுபத்தி கொளுத்தி, தேங்காய் உடைத்த அவர், இனிப்புகள் மற்றும் பூக்களை படைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்து, விவசாய பணிகளை தொடங்கினார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.