தோனிக்கு கிடைத்த வாழ்நாள் கவுரவம்... கிரிக்கெட் சங்கம் அதிரடி முடிவு...!

ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் கௌரவ உறுப்பினராக மகேந்திர சிங் தோனி உள்ளார்.

தோனிக்கு கிடைத்த வாழ்நாள் கவுரவம்... கிரிக்கெட் சங்கம் அதிரடி முடிவு...!
தோனி
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2019, 4:47 PM IST
  • Share this:
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல், வரும் அக்டோபர் 22-ம் நடைபெற உள்ளது. இதற்குமுன் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்று சிஓஏ  (கிரிக்கெட் கட்டுப்பாட்டு முகமை) அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து அனைத்து மாநில கிரக்கெட் சங்கத்தினரும் தனது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்திலும் புதிய தலைவர் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் கவுரவ உறுப்பினராக தோனி உள்ளார். அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் தேர்தலில் யார் வாக்களிக்கலாம், யாரை உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுப்பதில் அவருக்கும் பங்குள்ளது.

Also Watch : ₹35 லட்சம் மதிப்புடைய பைக்கில் சுற்றும் தோனி! வைரலாகும் வீடியோ


Loading...

மாநில கிரிக்கெட் வாரிய தேர்தலில் முன்னாள் வீரர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

தோனி தலைமையிலான இந்திய அணி தான் 3 விதமான உலகக் கோப்பையிலும் வெற்றியடைந்தது. தோனியை பெருமைப்படுத்தும் விதமாக ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினராக அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பொதுக்குழு ஆலோசனைக்கு பின்னர் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Also Watch

First published: September 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...