கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி - சுரேஷ் ரெய்னா

இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதுகிறது

Prabhu Venkat | news18
Updated: May 28, 2019, 3:45 PM IST
கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி - சுரேஷ் ரெய்னா
தோனி, ரெய்னா
Prabhu Venkat | news18
Updated: May 28, 2019, 3:45 PM IST
கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வருகின்ற 30-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்குகிறது. இதில், பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் தோனி குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ‘கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியிருக்கலாம் ஆனால் இந்திய அணிக்கு மூளையாக தோனி செயல்படுகிறார். கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி. தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக தோனி இல்லாமல் இருக்கலாம். ஆனால் களத்தில் விராட் கோலி-க்கு தோனி தான் கேப்டன். பவுலர்கள், வீரர்களுக்கு அறிவுரை வழங்குவது என இப்போதும் தோனி கேப்டனாக தான் இருக்கிறார். தோனி விக்கெட் கீப்பராக இருக்கும் போது கோலி நம்பிக்கையாக இருப்பார். அதை கோலியே பல முறை சொல்லி இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

Also watch

First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...