மகளுடன் தமிழில் பேசும் ‘தல’ தோனி: வைரலாகும் வீடியோ!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 12வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பெங்களூரு அணியை 70 ரன்னில் சுருட்டி தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

news18
Updated: March 25, 2019, 9:27 AM IST
மகளுடன் தமிழில் பேசும் ‘தல’ தோனி: வைரலாகும் வீடியோ!
தனது மகள் ஸிவாவுடன் தோனி
news18
Updated: March 25, 2019, 9:27 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது மகளுடன் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் கேள்விகளுக்கு தோனியின் செல்ல மகள் ஸிவா தோனி பதிலளிக்கும் கியூட் வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது மகளுடன் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தோனி தனது மகள் ஸிவா தோனியிடம், “எப்படி இருக்கீங்க?” எனக் கேட்க, அதற்கு மழலை குரலில் “நல்லா இருக்கேன்” என ஸிவா பதிலளிக்கிறார். மேலும், 6 மொழிகளில் தோனி தனது மகளிடம் கேள்வி கேட்க, அதற்கு அவரது மகள் க்யூட்டாக அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார்.
Loading...


ஐபிஎல் போட்டிகளுக்கிடையே, மகளுடன் மொழிப் பயிற்சி என பதிவிட்டுள்ள தோனியின் அந்த வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் ஆகவும் மாறியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 12-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பெங்களூரு அணியை 70 ரன்னில் சுருட்டி தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also See..

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...