தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #CSKvRR

news18
Updated: April 1, 2019, 12:03 PM IST
தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!
தோனி
news18
Updated: April 1, 2019, 12:03 PM IST
நேற்றைய போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் அவுட்டாகாமல் தப்பித்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய சென்னை அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காந்திருந்தது. 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சென்னை அணியின் ராயடு 1 ரன்னிலும், வாட்சன் 13 ரன்னிலும், ஜாதவ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ரெய்னா-தோனி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரெய்னா தனது பங்கிற்கு 36 ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, அரைசதம் கடந்தார் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி, உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் விளாசியது.

இந்தப் போட்டியின் 6-வது ஓவரின் போது ஆர்ச்சர் வீசிய பந்து தோனியின் காலில் பட்டு உருண்டு ஸ்டெம்பில் பட்டது. ஆனால் பெயில்ஸ் கீளே விழாததால் நூலிழையில் அவுட்டகாமல் தப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தப் போட்டியில் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அந்த ஓவரில் மட்டும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தால் சென்னை அணி அதிக ரன்களை எடுக்காமல் இருந்திருக்கும்.

இதையடுத்து, சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து, சரிவை சந்தித்தது. இருந்தும் கடைசி ஓவர் வரை நீடிந்த இந்தப் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also watchPOINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...