தோனி செய்த ஸ்டம்பிங் அவுட் இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு

#MSDhoni Stumping Is Review by #ICC | குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் ஆட்டமிழந்தார். #TimSeifert

தோனி செய்த ஸ்டம்பிங் அவுட் இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி. (BCCI)
  • News18
  • Last Updated: February 13, 2019, 3:11 PM IST
  • Share this:
நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட்டை ஆட்டமிழக்கச் செய்த தோனியின் ஸ்டம்பிங் உண்மையிலேயே அவுட் தானா என ஐசிசி ஆய்வு செய்து வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 10 ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து நடந்த டி-20 தொடரை இந்திய அணி 1-2 என இழந்தது.

இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் என்று வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்.


அப்போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் ஆட்டமிழந்தார்.

Tim Seifert, டிம் செயிஃபெர்ட்
அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் செயிஃபெர்ட். (BlackCaps)


ஆனால், டிவி ரீப்ளேயில் செய்பெர்ட்டின் கால் கிரீஸை பாதி தூரம் கடந்தது தெரிந்தது. கள நடுவர் 3-வது நடுவரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். 3-வது நடுவர் நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் அவுட் என அறிவித்தார். இதன்மூலம், அதிவேக ஸ்டம்பிங் பட்டியலிலும் தோனியின் ஸ்டம்பிங் இடம்பிடித்தது.இந்நிலையில், நியூசிலாந்து அணி சார்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில், நடுவர்களின் தீர்ப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆய்வு செய்து வருகிறது. போட்டி முடிந்த பின், ஆய்வு செய்வதால் எந்தவித பலனும் இல்லை என்றாலும், நடுவர்கள் தங்களது தவறுகளை சரிசெய்துகொள்ள இது உதவும்.

தோனியைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்: விஜய் சங்கர் நெகிழ்ச்சி!

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading