• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின், டிராவிடுக்கு அடுத்த இடத்தில் ‘தல’ தோனி!

சச்சின், டிராவிடுக்கு அடுத்த இடத்தில் ‘தல’ தோனி!

இந்தியா விளையாடக்கூடிய கிரிக்கெட் போட்டியில் சச்சின் அவுட் ஆனால் டிவியை ஆஃப் செய்துவிடும் தலைமுறையை போட்டியின் இறுதி வரை பார்க்கவைத்தவர் தோனி.

இந்தியா விளையாடக்கூடிய கிரிக்கெட் போட்டியில் சச்சின் அவுட் ஆனால் டிவியை ஆஃப் செய்துவிடும் தலைமுறையை போட்டியின் இறுதி வரை பார்க்கவைத்தவர் தோனி.

#MSDhoni joint-third in list of most ODIs for India | கடந்த 2004-இல் வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் அரங்கில் தோனி அறிமுகமானார். #NZvIND

  • News18
  • Last Updated :
  • Share this:
    கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில், இந்திய அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் தோனி உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004-இல் வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் அரங்கில் தோனி அறிமுகமானார்.

    தோனி, Dhoni
    மகேந்திர சிங் தோனி. (BCCI)


    மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அணிக்கு திரும்பினார். 2019-ம் ஆண்டில், தான் விளையாடிய முதல் 3 போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்திய தோனி, விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலளித்தார்.

    Dhoni, தோனி
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றார். (ICC)


    இதனை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தனது இடத்தை உறுதி செய்தார். நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி, 48 ரன்கள் விளாசினார். தோனியின் அதிரடியால் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.

    ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தோனி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடிவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

    Dhoni, தோனி
    தோனி அதிரடியால் இந்திய அணி 324 ரன்கள் குவித்தது. (BlackCaps)


    சச்சின் டெண்டுல்கர் (463), ராகுல் டிராவிட் (344), மகேந்திர சிங் தோனி (337), அசாருதீன் (334), சவுரவ் கங்குலி (311) ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

    NZvIND, 2nd ODI: தோனி அதிரடி, இந்திய அணி 324 ரன்கள் குவிப்பு!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: