இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் டென்னிஸ் பயிற்சியாளர் சுரேந்தர் குமாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். தோனி விருந்தில் கலந்து கொண்டு சுரேந்தர் குமாரின் அன்றைய சிறப்பு நாளில் முழு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழந்தார்.

கேக் வெட்டும் விழாவின் போது குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அருகில் தோனி நிற்பதைக் காணக்கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் நெட்டிசன்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.
சுரேந்தர் குமார் முன்னாள் ஆசிய தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் தற்போது ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ டென்னிஸ் அகாடமியில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவர் தோனிக்கு குடும்பசகிதமாக நெருக்கமானவர். இருவரும் அடிக்கடி டென்னிஸ் விளையாடுவது வழக்கம்.
கடந்த ஐபிஎல் 2022 தொடரில் தோனி 14 ஆட்டங்களில் 232 ரன்கள் எடுத்தார்.அணி சரியாக ஆடாமல் வெளியேறியது, 2023 தொடரில் கேப்டனாக தோனியே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.