சிஎஸ்கே வெற்றி ரகசியம் குறித்து முதல் முறையாக பேசிய தோனி!

உலகக்கோப்பை நெறுங்கி வரும் நிலையில் நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தோனி பதிலளித்துள்ளார்

சிஎஸ்கே வெற்றி ரகசியம் குறித்து முதல் முறையாக பேசிய தோனி!
கேப்டன் தோனி
  • News18
  • Last Updated: April 24, 2019, 9:37 AM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம்  குறித்து அணியின் கேப்டன் தோனி பேசியுள்ளார்.

சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்தார்.


இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டுபிளிஸிஸ் களமிறங்கினர். டுபிளிஸிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

மறுபுறம், ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடினார். அவர் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். 19.5-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை வெற்றி பெற்றது.

சென்னை அணியின் வெற்றி ரகசியம் குறித்து ஹர்சா போக்லே கேட்ட கேள்விக்கு தோனி, ‘அந்த ரகசியத்தை என்னால் சொல்ல முடியாது. அதை சொல்லிவிட்டால் என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது.சிஎஸ்கேவின் வெற்றிக்கு அணியின் உரிமையாளர்கள், ரசிகர்களின் ஆதரவும் ஒரு காரணம். இதை தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது. உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்’ என்று பதிலளித்துள்ளார்.Also watch

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்