• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின் மகன் தோனியின் ஆசிரியர் பணி விண்ணப்பம்... ரசிகர்கள் குழப்பம்!

சச்சின் மகன் தோனியின் ஆசிரியர் பணி விண்ணப்பம்... ரசிகர்கள் குழப்பம்!

எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர்,

எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர்,

விண்ணப்பம் செய்பவரின் பெயர் எம்.எஸ்.தோனி என்றும் அவரின் தந்தை சச்சின் டெண்டுல்கர் எனவும் இருந்துள்ளது.

  • Share this:
மகேந்திர சிங் தோனி, சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள ஆசிரியர் பணியிடம் ஒன்றுக்காக விண்ணப்பித்திருக்கிறார். கேட்கவே வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் அதனை விடவும் வியப்பையும், ஆச்சரியத்தையும் தருவது என்னவென்றால் எம்.எஸ்.தோனியின் தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர் என விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது தான்.. மகேந்திர சிங் தோனியின் ஆசிரியர் விண்ணப்பம் நேர்முகத்தேர்வுக்காக இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் தான் அந்த நேர்முகத்தேர்வுக்கு வரவில்லை.

உண்மையில் இது இந்திய முன்னாள் கேப்டன்களான எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர் குறித்தானது அல்ல.. 14850 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியாளர் தேர்வு ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதற்காக வந்த விண்ணப்பத்தில் ஒன்று தான் எம்.எஸ்.தோனி பெயரிலான விண்ணப்பம்.

Also Read:   விலையுயர்ந்த பங்களாவை நஷ்டத்துக்கு விற்பனை செய்த ரோகித் சர்மா..! காரணம் என்ன?

விண்ணப்பம் செய்பவரின் பெயர் எம்.எஸ்.தோனி என்றும் அவரின் தந்தை சச்சின் டெண்டுல்கர் எனவும் இருந்துள்ளது. இருப்பினும் இந்த விண்ணப்பம் பரீசிலனை செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 15 விண்ணப்பங்களில் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது. அப்போது தான் நேர்முகத் தேர்வுக்கான அதிகாரிகள் இது போலி விண்ணப்பம் என்பதை உணர்ந்திருக்கின்றனர். அந்த விண்ணப்பத்தின்படி துர்க் பகுதியில் உள்ள CSVTU பல்கலைக்கழகத்தில் தோனி பொறியியல் பட்டம் பெற்றவர் என கூறப்பட்டுள்ளது.

Also Read:    பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்த விண்ணப்ப விவகாரம் அதிகாரிகளை தொடர்ந்து, மற்றவர்களுக்கும் தெரியவந்தது. தற்போது இந்த விண்ணப்பத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாக மாறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த போலி விண்ணப்பத்தை சரியாக பரிசீலிக்காமல் நேர்முகத்தேர்வுக்கு இறுதி செய்த அதிகாரிகள் தற்போது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையின் முடிவில் தான் இந்த விவகாரம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: