காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து கர்ஜனையைவிட பயங்கரமா இருக்கும்! - சேப்பாக்கத்தில் 'தல' வெறியாட்டம் - வைரல் வீடியோ

IPL 2020 | MS Dhoni | ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து கர்ஜனையைவிட பயங்கரமா இருக்கும்! - சேப்பாக்கத்தில் 'தல' வெறியாட்டம் - வைரல் வீடியோ
பயிற்சியின் போது தோனி
  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தீவிரமாக பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பயின் மும்பை - சி.எஸ்.கே அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில நாட்களுக்கு முன் பயிற்சியைத் தொடங்கினார். உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்து உள்ளனர்.


Also Read : உங்களுக்கு வந்தா ரத்தம், மற்றவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?: இங்கிலாந்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் தன்னை நிரூபிக்க தோனி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வலைபயிற்சியின் போது தோனி தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசும் வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட் தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading