பாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் ஹிந்தி பாடல் ஒன்றை தோனி பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் அரங்கில் தோனி என்ற பெயருக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. கூல் கேப்டன், ஆல் டைம் ஃபேவரைட், என ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் தோனிதான் இந்தியாவிற்கு 3 வித கோப்பைகளையும் பெற்று தந்த ஒரே கேப்டன்.
ரன் வேட்டையில் மிகப்பெரிய சாதனைகளை அரங்கேற்றாவிட்டாலும், ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர். 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு பிறகு எந்த வித தொடரிலும் விளையாடாத தோனி, மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார். "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற கர்வத்துடன் தோனி களமிறங்கும் போட்டியை காண ஆர்வமுடன் காத்துள்ளனர் ரசிகர்கள்.
இந்திய அணியில் தோனி விளையாடாவிட்டாலும், தோனியின் செயல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுட்டு தான் வருகிறது. அதேபோல் தான், தோனி பாத்ரூமில் அமர்ந்து பாட்டு பாடும் வீடியோ அண்மையில் சமூக வலைதள ரசிகர்களை ஈர்த்துள்ளது.
பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் ஆகியோருடன் பாத்ரூமில் "mere mehboob qayamat hogi" என்ற ஹிந்தி பாடலை தோனி அமர்ந்து பாடும் வீடியோவை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் மார்ச் 1 ஆம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போ்டடியில் தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.