தோனி, அம்பயரிடம் வாக்குவாதம் செய்ததற்கு 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியிருப்பது சென்னை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் கடந்த 11-ம் தேதி நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன், 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்தப் போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் அம்பயர் முதலில் நோ-பால் என கூறி பின்னர் இல்லை என்றார்.
அப்போது, மைதானத்துக்கு வெளியே இருந்த தோனி, உள்ளே சென்று அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். போட்டி விதிமுறைகளை மீறிய தோனிக்கு 50 சதவீத ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அம்பயருடன் தோனி வாக்குவாதம். (BCCI)
இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், “தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அதே நேரத்தில் தோனியின் பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் மைதானத்தின் உள்ளே சென்று அம்பயரிடம் வாக்குவாதம் செய்தது தவறு. இது போன்ற செயலுக்கு தோனி போன்ற மிகப்பெரிய வீரரே முன் உதாரணமாக இருந்துவிடக் கூடாது. அதனால் அவரை 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்.
சேவாக்கின் இந்த பதில், சென்னை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!
கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.