பள்ளிப்பருவத்தை மீண்டும் நினைவுப்படுத்தும் காட்சிகள்... தோனி வெளியிட்ட வைரல் வீடியோ

பள்ளிப்பருவத்தை மீண்டும் நினைவுப்படுத்தும் காட்சிகள்... தோனி வெளியிட்ட வைரல் வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 3:48 PM IST
  • Share this:
தோனி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பள்ளிப்பருவத்தை நினைவுப்படுத்தும் நகைக்சுவையான காட்சிகளாக உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தோனியின் ஓய்வு குறித்து பலர் முன்னாள் வீர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி இதுவரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தோனி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் இரவு நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அதில் ஒருவர் முதல் பந்திலேயே அவுட்டாக நான் இன்னும் தயாராகவில்லை இது ட்ரையல் தான் என்று அழுவினி ஆட்டம் ஆடுகிறார்.


பின் மீண்டும் பேட்டிங் செய்யும் அவர் சிக்ஸர் அடிப்பது போல் பேட்டை உயர்த்த பந்து ஸ்டெம்பில் பட்டு அவுட்டாகி விடுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மில் பலர் முதல் பந்திலேயே அவுட்டானால் இது ட்ரையல் என்று ஏமாற்றும் காட்சிகள் கண்முன் வந்து போகும்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தோனி “இந்த வீடியோ மோசமான வெளிச்சத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால், இதில் உள்ள நகைச்சுவை ட்ரையல் பால், அம்பயர் தீர்ப்பு தான் இறுதி என்பது தான். நம் பள்ளிக் கூட நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது" என்று கூறி உள்ளார்.

Also Watch : அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்