எதிரணிக்கும் பீல்டிங் செட் செய்த தோனி... வைரல் வீடியோ

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் தோனி, ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர்

எதிரணிக்கும் பீல்டிங் செட் செய்த தோனி... வைரல் வீடியோ
தோனி
  • News18
  • Last Updated: May 29, 2019, 12:58 PM IST
  • Share this:
இந்திய அணி வீரர் தோனி நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் எதிரணியின் பீல்டிங்கை செட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்தப்போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 50-ஓவர் முடிவில் 359 ரன்களை எடுத்தது. தோனி, ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.


இந்தப் போட்டியில் தோனி சதம் அடித்து ரசிகளுக்கு விருந்து கொடுத்தார். ஆனால் அது மட்டுமல்ல மேலும் ஒரு விஷயத்தை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆம், போட்டியின் 39-வது ஓவரின் போது தோனி எதிரணியினரின் பீல்டிங்கை செட் செய் செய்த விஷயம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பவுலர் பந்தை வீச வந்த போது, அவரை நிறுத்தத் சொல்லி பீல்டிங்கை செட் செய்தார் தோனி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால் பவுலரும் தோனியின் பேச்சை கேட்டு அவர் செயல்பட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தோனியின் இந்த செயலால் ட்விட்டர் அதிர்ந்துள்ளது.





First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading