சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!

#MSDhoni, #RohitSharma arrive in Sydney | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 12-ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. #AUSvIND

Web Desk | news18
Updated: January 8, 2019, 10:13 PM IST
சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!
சிட்னியில் தோனி மற்றும் ரோகித் சர்மா. (Video Grab)
Web Desk | news18
Updated: January 8, 2019, 10:13 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி வீரர்கள் சிட்னி வந்து சேர்ந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Virat Kolhi, விராட் கோலி, Tim Paine
கைகுழுக்கும் இரு அணி கேப்டன்கள் விராட் கோலி (இடது) மற்றும் டிம் பெய்ன். (Cricket Australia)


அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


இதனை அடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோர் சிட்னி வந்து சேர்ந்தனர்.



குழந்தையைப் பார்ப்பதற்காக நாடு திரும்பிய ரோகித் சர்மா, மீண்டும் அணியில் இணைந்தார். சுழற்பந்து வீச்சாளர் சாஹல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் சிட்னி வந்து சேர்ந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 12-ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது.

வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!

Also Watch...

First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்