இந்திய ராணுவம் பயன்படுத்தும் காரில் மைதானத்திற்கு வந்த தோனி - வைரல் வீடியோ

இந்திய ராணுவம் பயன்படுத்தும் காரில் மைதானத்திற்கு வந்த தோனி - வைரல் வீடியோ
மகேந்திர சிங் தோனி
  • Share this:
ராஞ்சி கிரிக்கெட் மைதானத்திற்கு மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவம் பயன்படுத்தும் காரில் வந்து அசத்தி உள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க தோனி வருவார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். டெஸ்ட் போட்டியின் முதல் 3 நாட்கள் அவர் வரவில்லை.

ஆனால் 4வது நாள் ராஞ்சி மைதானத்திற்கு தோனி வருகை தந்தார். 4வது நாள் போட்டி 2 ஓவர்களிலேயே முடிந்து விட்டது. ராஞ்சி மைதானத்திற்கு வந்த தோனி இந்திய ராணுவத்துக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி காரில் வந்தார்.


தோனி மைதானத்திற்கு வந்த போது அங்கு குவிந்து இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிது.நிசான் Jonga எஸ்யூவி கார் உற்பத்தி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நிறுத்தும் முன்னர் லிமிடெட் எடிஷனாக குறைந்த எண்ணிக்கையிலான கார்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்கப்பட்டன. இத்தகைய வின்டேஜ் ரக காரைத்தான் தற்போது தோனி பயன்படுத்தி வருகிறார்.

Also Watch

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading