''எனக்கும் கோபம் வரும்...'' களத்தில் அமைதியாக இருப்பது குறித்து மனம் திறந்த 'கேப்டன் கூல்' தோனி

சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன். ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானது இல்லை.

''எனக்கும் கோபம் வரும்...'' களத்தில் அமைதியாக இருப்பது குறித்து மனம் திறந்த 'கேப்டன் கூல்' தோனி
மகேந்திர சிங் தோனி
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, களத்தில் எப்போதும் கூலாக இருப்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன் டிராபி என மூன்று விதமான உலகக் கோப்பையை வென்று தந்தவர். களத்தில் தனி ஒருவராக இருந்து பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர்.

கேப்டன் பொறுப்பிலிருக்கும் தோனி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் சக வீரர்கள் மற்றும் மற்ற அணி வீரர்களிடமும் பொறுமையுடன் செயல்படக்கூடியவர். அவரின் பொறுப்பும், நிதானம் மூலமாக கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்டவர்.


மகேந்திர சிங் தோனியிடம் களத்தில் வீரர்கள் தங்களது உணர்வுகளை எப்படி கட்டுப்டுவத்துவது என்று உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படி உங்களால் இதுப்போன்று செயல்பட முடிகிறது என்று ரீபப்ளிக் வேர்ல்டு டிவி கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த தோனி, “களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும்.

Also Read : இப்படி ஒரு மொழிப்பெயர்ப்பை பார்த்தது உண்டா! இலங்கை - பாகிஸ்தான் போட்டியில் சுவாரஸ்யம் 

நான் சமமான அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன். சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன். ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானது இல்லை. இந்த உணர்ச்சிகளை விட அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டியது என்பது முக்கியமானது. எனது உணர்ச்சிகளை மற்ற சில நபர்களை விட சற்று சிறப்பாக கட்டுப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன்“ என்றார்.உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பெற்ற தோல்விக்கு பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் அணியில் இடம்பெறாத தோனி, வங்கதேசத்திற்கு எதிராக நவம்பர் நடைபெற உள்ள தொடரிலும் இடம்பெறமாட்டார் என்று கூறப்படுகிறது.

Also Read : இந்தியாவில் சச்சின், சேவாக், லாரா பங்கேற்கும் டி20 தொடர்! ரசிகர்கள் மகிழ்ச்சி


Also Watch

First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading