முகப்பு /செய்தி /விளையாட்டு / மெல்போர்னா? வான்கடேவா? தோனி..தோனி.. என கத்திய ரசிகர்கள்! (வீடியோ)

மெல்போர்னா? வான்கடேவா? தோனி..தோனி.. என கத்திய ரசிகர்கள்! (வீடியோ)

தோனியை வரவேற்ற மெல்போர்ன் ரசிகர்கள்.

தோனியை வரவேற்ற மெல்போர்ன் ரசிகர்கள்.

#MSDhoni receiving roaring reception | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மொத்தம் 193 ரன்கள் எடுத்த தோனி, தொடர் நாயகன் விருதை பெற்றார். #AUSvIND

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தோனி களமிறங்கியதுபோது மைதானத்தில் இருந்த ஏராளமான ரசிகர்கள், தோனி... தோனி... என கத்தி பலத்த ஆதரவு அளித்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் நடந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)

இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர், முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது.

team india, இந்திய அணி
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)

4-வது வீரராக களமிறங்கிய தோனி, பொறுமையாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். 87 ரன்கள் எடுத்த தோனி, 2019-ல் விளையாடிய 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்தார்.

Dhoni, தோனி
மகேந்திர சிங் தோனி. (ICC)

இந்திய அணி 59 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது வீரராக மகேந்திர சிங் தோனி களமிறங்க பெவிலியனில் இருந்து வெளியே வந்தார். அப்போது, மைதானத்தில் இருந்த ஏராளமான ரசிகர்கள், தோனி... தோனி... என கத்தினர். ஒரு கட்டத்தில் இது மெல்போர்ன் மைதானமா? இல்லை வான்கடே மைதானமா? என்ற சந்தேகம் எழுவதுபோல் இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மொத்தம் 193 ரன்கள் எடுத்த தோனி, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். ரசிகர்கள், தோனி... தோனி... என ரசிகர்கள் கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பந்தை நீங்களே வச்சுக்கோங்க…இல்லேனா நான் ஓய்வு என கூறுவார்கள்? தோனி கிண்டல்!

Also Watch...

First published:

Tags: Ind Vs Aus, India vs Australia, Melbourne, MS Dhoni