ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி
தோனி
  • News18
  • Last Updated: April 7, 2019, 11:28 AM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சக வீரர்களின் குழந்தைகளுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில், தொடக்க வீரர் வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார். கடைசிக் கட்டத்தில், தோனி மற்றும் அம்பத்தி ராயுடு சற்று அதிரடியாக ஆடியதால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். எனினும் அந்த அணியின் ராகுல், சர்ஃபராஜ் கான் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். இருப்பினும் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பஞ்சாப் அணியுடனான போட்டி நிறைவு பெற்ற பின், சென்னை அணியின் வாட்சன் மற்றும் இம்ரான் தாஹிரின் மகன்கள் மைதானத்தில் விளையாடிய போது ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகினர். இதனை பின்னால் இருந்து வேடிக்கை பார்த்த தோனி, சிறுவர்களுக்கு முன்னதாக பந்தயத்தை தொடங்கி ஓட ஆரம்பித்தார். அவர்களுடன் சிறிது தூரம் ஓடிய தோனி, தாஹிரின் மகனை தூக்கிகொண்டு திரும்பி ஓடிவந்து எல்லையை அடைந்தார். வாட்சன் மகன் திரும்பி ஓடிவரும் வரை அங்கு நின்ற தோனி, அந்த சிறுவன் வந்த உடன் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.



 

நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also watch

First published: April 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading