முதல் முறையாக தோனி பெயரில் பெவிலியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஐசிசியின் 3 முக்கியமான கோப்பைகளை வென்று கொடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வெற்றிக் கேப்டன் என்ற பெருமை தோனி வசம் உள்ளது.

முதல் முறையாக தோனி பெயரில் பெவிலியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
பெவிலியனுக்கு தோனி பெயர்.
  • News18
  • Last Updated: February 14, 2019, 12:35 PM IST
  • Share this:
முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு மகேந்திர சிங் தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். தனது அசாத்திய திறமைகளால் அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

MS Dhoni, மகேந்திர சிங் தோனி.
மகேந்திர சிங் தோனி. (ICC)அத்துடன், ஐசிசியின் 3 முக்கியமான கோப்பைகளை வென்று கொடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வெற்றிக் கேப்டன் என்ற பெருமையையும் தோனி பெற்றார். தற்போது, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

இந்திய அணி இக்கெட்டான நிலையில் தவிக்கும்போது கை கொடுக்கும் வீரர்களில் முன்னணி இடத்தில் தோனி இருக்கிறார். கடந்த ஓராண்டுகளாக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த அவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் தன்னை மீண்டும் நிரூபித்தார்.

இந்நிலையில், முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு மகேந்திர சிங் தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்காக மைதானம் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ளது. இந்த மைதானத்தில் தெற்குப் பகுதிக்கு (South stand) எம்.எஸ்.தோனி பெவிலியன் என்ற பெயரிடப்பட்டுள்ளது.
Dhoni Pavilion, தோனி பெவிலியன்
ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தோனி பெவிலியன். (Twitter)


தோனியின் சாதனைகளைக் கவுரவப்படுத்தியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

தோனி செய்த ஸ்டம்பிங் அவுட்டே இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு!!!

Also Watch...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்