ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஓசூரில் தோனியின் சொந்த ஸ்கூல்! 4 ஏக்கரில் கிரிக்கெட் கிரவுண்ட் ஓபன் செய்த தல!

ஓசூரில் தோனியின் சொந்த ஸ்கூல்! 4 ஏக்கரில் கிரிக்கெட் கிரவுண்ட் ஓபன் செய்த தல!

கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தோனி

கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தோனி

எம்.எஸ் தோனி வருகையையொட்டி ஓசூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  தனியார் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைத்தார்.

  ஓசூர் கசவகட்டா பகுதியில் உள்ள எம்.எஸ் தோனிக்கு சொந்தமான பள்ளி ஒன்று உள்ளது. எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி என்ற அந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பள்ளியின் ஓனருமான எம்.எஸ் தோனி, பள்ளியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இந்த பள்ளி தனது அதிகாரப்பூர்வ இணைப்பை அறிவித்துள்ளது. பள்ளி நேரத்துக்கு பின் அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பு நிகழ்ச்சியையும் எம்.எஸ்.தோனி தொடங்கி வைத்தார்.

  Also Read: 37 ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி

  இது தவிர கால்பந்து மைதானத்தில் டிஜிட்டல் முறையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தோனி தொடங்கி வைத்தார். எம்.எஸ் தோனி வருகையையொட்டி ஓசூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  செய்தியாளர்: செல்வா

  Published by:Arunkumar A
  First published:

  Tags: CSK, MS Dhoni