தலாய்லாமா நீங்களா? வைரலாகும் தோனியின் ஐபிஎல் 2021 புது அவதாரம்!

தோனி

தலையில் மொட்டையடித்த படி குழந்தைகளுக்கு பாடம் புகட்டும் தோனியை கண்ட பலரும் அதிர்ச்சியில் தோனியா இது? என வியந்த வண்ணம் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 • Share this:
  சி.எஸ்.கே அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய கேப்டனுமான எம்.எஸ். தோனியின் புதிய அவதார வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் இந்திய தலாய்லாமா தோனி என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

  ஐபில் போட்டியின் சமீபத்திய ப்ரொமோ வெளியாகியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், எம்.எஸ். தோனியின் தோற்றம் பலரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. தலையில் மொட்டையடித்த படி குழந்தைகளுக்கு பாடம் புகட்டும் தோனியை கண்ட பலரும் அதிர்ச்சியில் தோனியா இது? என வியந்த வண்ணம் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

   

      

  ஐ.பி.எல் 2021 ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன.

   

      

  கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இந்தாண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி ஐ.பி.எல் தொடர் நடைபெற உள்ளது. ஆனால் அனைத்து உள்ளூர் அணிகள் மோதும் போட்டியும் வேறு மாநில மைதனாத்தில் நடைபெறுவது போன்று அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போட்டிகள் நடைபெற்றாலும் சி.எஸ்.கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை. மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் மட்டுமே சி.எஸ்.கே போட்டிகள் நடைபெற உள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: