தல தோனியின் நியூ லுக்... சி.எஸ்.கே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்..

தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தாலும் அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாவது வழக்கம்.

தல தோனியின் நியூ லுக்... சி.எஸ்.கே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்..
மகேந்திர சிங் தோனி
  • Share this:
மகேந்திர சிங் தோனியின் புதிய வீடியோ ஒன்றை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். ஐ.பி.எல் தொடரில் தல தோனியின் ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றமடைந்தனர். தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தாலும் அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாவது வழக்கம்.


Also Read : டெக்கன் சார்ஜர்ஸ் நீக்கப்பட்ட விவகாரம்: ரூ.4800 கோடி வழங்க பிசிசிஐ-க்கு நடுவர் குழு உத்தரவு..

தற்போது அதுப்போன்று வீடியோ ஒன்றை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்தும், லைக் செய்தும் உள்ளனர்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை வெற்றிகரமாக நடத்திட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தீவிர முனைப்பு காட்டி வருகிறார். ஐ.பி.எல் இல்லாமல் இந்த ஆண்டு நிறைவு பெறாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஐ.பி.எல் தொடரில் தோனியின் விஸ்வரூபத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading