ஒரே போட்டியில் தோனி படைத்த மூன்று சாதனைகள்!

சிக்சர் விளாசிய தோனி. (BCCI)

#MSDhoni Joins Elite List Of Indian Batsmen With Gritty Fifty In 1st ODI | முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி தோனி முக்கிய காரணமாக இருந்தார். #INDvAUS

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோனி 3 சாதனைகளை செய்துள்ளார்.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

  தோனி, கேதர் ஜாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. கேதர் ஜாதவ் 81 ரன்களை குவித்தார். தோனி 72 பந்துகளில் 59 ரன்களைச் சேர்த்து சில சாதனைகளைப் படைத்தார்.

  MS Dhoni, தோனி
  பந்தை சிக்சருக்கு பறக்கவிடும் தோனி. (ICC)


  மொத்தம் 412 முதல் தர ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13,000 ரன்களைக் கடந்தார். இந்த சாதனையை எட்டும் 4-வது இந்திய வீரர் தோனி.

  முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுலகர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோனி, கேதர் ஜாதவ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட மிகப் பெரிய 5-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும்.

  மேலும், ஹைதராபாத்தில் இதுவே 2-வது பெரிய பார்ட்னர்ஷிப். இதற்கு முன், 2009-ல் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மற்றும் ஷான் வாட்சன் ஜோடி 145 ரன்கள் குவித்தது.

  MS Dhoni, தோனி
  பொறுப்புடன் விளையாடிய தோனி. (BCCI)


  தோனி, இந்த போட்டியில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை தன் வசமாக்கினார்.

  ரோகித் சர்மா மற்றும் தோனி இருவரும் 215 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.

  தோனி, மொத்தம் 223 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில், 7 ஆசிய லெவன் அணிக்காக அடிக்கப்பட்டது என்பதால் அந்த சிக்சர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

  VIDEO: தல போல வருமா... ஹேண்ட்ஸ்கோம்பை கலாய்த்த நெட்டிசன்கள்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: