உலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ
சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா தான் சிறந்த பாடகர் என்று பிராவோ கூறியுள்ளார்.

தோனி-பிராவோ
- News18
- Last Updated: May 3, 2019, 8:14 AM IST
இந்த உலகத்திலே தோனி தான் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே அணியின் பிராவோ கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சிஎஸ்கே அணி, தோனி, உலகக் கோப்பை குறித்து பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில், ஐபிஎல் தொடர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக உள்ளது. சிறந்த தலைமையின் கீழ் பயிற்சி பெறுகிறோம். வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஐபிஎல் உதவுகிறது. இதுதான் ஐபிஎல்-ன் சிறப்பு என்று கூறியுள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணிக்காக விளயாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிவது சந்தோஷமான விஷயம். சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா தான் சிறந்த பாடகர், தோனியின் தலைமை குறித்து என்னால் நிறைய சொல்ல முடியும், அவரது தலைமை குறித்து அனைவருக்கும் தெரியும். இந்த உலகிலேயே தோனி தான் சிறந்த கேப்டன் என்று பிராவோ கூறியுள்ளார். உலகக் கோப்பையில் மற்ற அணிகளை போல வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெயில், அண்ட்ரூ ரசல் உள்ளிட்டோர் ஃபார்மில் உள்ளனர் என்று பிராவோ கூறியுள்ளார்.
Also see:
Also watch
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சிஎஸ்கே அணி, தோனி, உலகக் கோப்பை குறித்து பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில், ஐபிஎல் தொடர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக உள்ளது. சிறந்த தலைமையின் கீழ் பயிற்சி பெறுகிறோம். வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஐபிஎல் உதவுகிறது. இதுதான் ஐபிஎல்-ன் சிறப்பு என்று கூறியுள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணிக்காக விளயாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிவது சந்தோஷமான விஷயம். சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா தான் சிறந்த பாடகர், தோனியின் தலைமை குறித்து என்னால் நிறைய சொல்ல முடியும், அவரது தலைமை குறித்து அனைவருக்கும் தெரியும். இந்த உலகிலேயே தோனி தான் சிறந்த கேப்டன் என்று பிராவோ கூறியுள்ளார்.
Also see:
Also watch