தோனி எங்களுக்கு வழிகாட்டும் ஒளி...! ரோகித் சர்மா நெகிழ்ச்சி

#MSDhoni is our guiding light: #RohitSharma | ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பேட்ஸ்மேன்களின் செயல்களை துல்லியமாக தோனி கணிப்பார் என ரோகித் கூறியுள்ளார்.

news18
Updated: January 10, 2019, 2:22 PM IST
தோனி எங்களுக்கு வழிகாட்டும் ஒளி...! ரோகித் சர்மா நெகிழ்ச்சி
சதம் அடித்த ரோகித் சர்மாவைப் பாராட்டும் தோனி. (Getty Images)
news18
Updated: January 10, 2019, 2:22 PM IST
இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக தோனி இருக்கிறார் என்று ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


இதனை அடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்க உள்ளது. இதனையொட்டி, நீண்ட இடைவெளிக்குப்பின், முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, கேதர் ஜாதவ், கலீல் அகமது, அம்பதி ராயுடு ஆகியோர் அணிக்குத் திரும்புள்ளனர்.

Dhoni Practice, தோனி, வலைப்பயிற்சி
வலைப் பயிற்சியில் தோனி. (BCCI)


தனது குழந்தையைப் பார்க்கச் சென்ற ரோகித் சர்மா, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சிட்னியில் செய்தியாளர்களைச் சந்திந்த ரோகித் சர்மா, இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக தோனி இருக்கிறார் என புகழ்ந்துள்ளார்.
Loading...“பல ஆண்டுகளாக தோனி எங்களுடன் இருக்கும் நேரத்தில் மைதானம் மற்றும் ஓய்வு அறையில் அமைதி இருக்கும். ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனி இருப்பது கேப்டனுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அவர் எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.

Rohit Sharma, Dhoni, தோனி, ரோகித் சர்மா
மைதானத்தில் தோனி உடன் ரோகித் சர்மா. (BCCI)


மேலும், “சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோருக்கு மிகவும் உதவியாக இருப்பார். பேட்ஸ்மேன் என்ன செய்யப் போகிறார் என்பதை முன்பே கணித்து பவுலர்களுக்கு தெரியப்படுத்துவார். அத்துடன் போட்டியை முடிப்பதில் சிறந்த மேட்ச் பினிசராகவும் தோனி இருக்கிறார்” என்று ரோகித் கூறினார்.

Photos: சிட்னியில் வலைப் பயிற்சியை தொடங்கினார் தோனி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...