• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஜித்துக்குப் பிறகு தோனிதான்- ரேகா வடேகர் மனம் திறப்பு

அஜித்துக்குப் பிறகு தோனிதான்- ரேகா வடேகர் மனம் திறப்பு

தோனி - விராட் கோலி

தோனி - விராட் கோலி

முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகரின் மனைவி ரேகா வடேகர், தனக்குப் பிடித்த கேப்டன் எம்.எஸ்.தோனிதான் என்று கூறியுள்ளார்.

  • Share this:
    முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகரின் மனைவி ரேகா வடேகர், தனக்குப் பிடித்த கேப்டன் எம்.எஸ்.தோனிதான் என்று கூறியுள்ளார்.

    தோனி இந்திய கேப்டன்களில் சிறந்தவராக கருதப்படுபவர். அஜித் வடேகர் போன்றே தோனியும் அமைதியானவர் விவேகமானவர் என்கிறார் அஜித் வடேகர் மனைவி ரேகா வடேகர்.

    Also Read: கோலி என்ன பெருசு? நான் பார்க்காத கேப்டன்களா, வீரர்களா : கிளறும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

    1971-ல் இங்கிலாந்தில் முதன் முதலாக டெஸ்ட் தொடரை வென்ற கேப்டன் அஜித் வடேகர் ஆவார். வடேகரும் அமைதியான கேப்டன், கூல் கேப்டன் என்று தோனி போலவே அப்போது மதிக்கப்பட்டவர்.

    1971 இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் ஏனெனில் இங்கிலாந்தில் வென்று வலுவான மே.இ.தீவுகளிலும் தொடரை வென்று வந்தார் அஜித் வடேகர். 1971-ல் இங்கிலாந்தில் தொடரை வென்ற 50 ஆண்டுகால நினைவலைகளை முன்னாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மிட் டே என்ற இணையதளத்துக்குப் பேட்டியளித்த அஜித் வடேகரின் மனைவி ரேகா வடேகர் கூறும்போது, “விராட் கோலியைக் காட்டிலும் எனக்கு தோனியின் கேப்டன்சிதான் பிடிக்கும். கிட்டத்தட்ட அஜித் (வடேகர்) போல்தான் தோனியும்.

    Also Read: Pakistan vs West Indies| அப்ரீடி 10 விக்கெட்: பாகிஸ்தான் அபார வெற்றி- டெஸ்ட் தொடர் 1-1 சமன்

    தோனியும் அஜித் வடேகர் போலவே தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார். விராட் கோலியின் அதி ஆக்ரோஷம் அவர் பேட்டிங்கைக் காலி செய்து வருகிறது. கோலி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற ஆக்ரோஷத்தை அவர் குறைத்தால் நிச்சயம் சீராக அவரால் பேட்டிங்கில் ஆட முடியும்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    1971ம் ஆண்டு ஓவலில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் லெக் ஸ்பின்னர் சந்திரசேகர். அஜித் வடேகர் இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2,113 ரன்கள் எடுத்துள்ளார், 1 சதம் 14 அரைசதங்களை வடேகர் எடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: