ஹோம் /நியூஸ் /sports /

இதுதான் அந்த உற்சாகமான அறிவிப்பா? எம்.எஸ்.தோனியின் சேட்டைகள்!

இதுதான் அந்த உற்சாகமான அறிவிப்பா? எம்.எஸ்.தோனியின் சேட்டைகள்!

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

“2011ல் ஓரியோ அறிமுகமானது. அப்போது இந்தியா உலக கோப்பையை வென்றது. அதேபோல், இந்தாண்டு ஓரியோவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்போ?” என கேள்வியுடன் முடித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று 2 மணியளவில் சமூக வலைதளங்களில் நேரலையில் வந்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஓரியோ பிஸ்கட்டுகளை  ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

  இன்று 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை தோனி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அது என்ன அறிவிப்பாக இருக்கும் என பல்வேறு ஊகங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகளும் எழத்தொடங்கின.

  ஏற்கனவே அவர் திரைப்படம் தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அவர் தனது பதிவில் உற்சாகமான அறிவிப்பு என தெரிவித்திருந்ததால் ஒரு வேலை திரைப்படம் சம்மந்தப்பட்ட அறிவிப்பாக இருக்குமா என எதிர்பார்ப்புகளும் கிளம்பின. ஒரு சிலர் தோனியின் அரசியல் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கருதினர்.

  இந்நிலையில் இன்று 2 மணிக்கு நேரலை  வந்த அவர், ஓரியோ பிஸ்கட்டுகளை  ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.

  ' isDesktop="true" id="808298" youtubeid="202x6jrz7U0" category="cricket">

  இதனை குறுக்கிட்ட ஒருவர், ஓரியோ தான் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதே என கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி,

  “2011ல் ஓரியோ அறிமுகமானது. அப்போது இந்தியா உலக கோப்பையை வென்றது. அதேபோல், இந்தாண்டு ஓரியோவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்போ?” என கேள்வியுடன் முடித்தார்.

  இதையும் வாசிக்க: டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் ஓய்வு - மனதை உருக்கும் வீடியோ

  அதற்கு இந்தாண்டு இந்தியா உலக கோப்பையை வெல்லும் என மற்றொருவர் பதிலளித்தார். இதனையடுத்து பேசிய தோனி, To create history, we have to recreate history, வரலாற்றை உருவாக்க, அதை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.

  இதனை லைவ்வில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஒன்றும் விளங்காமல் திகைத்து போனார்கள். கடையில் பார்த்தால் அது ஓரியோ பிஸ்கட் விளம்பரம் என தெரியவந்தது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Advertisement, Facebook, MS Dhoni