ஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன? நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதால் தோனி இடம்பிடிப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vijay R | news18
Updated: July 19, 2019, 10:14 PM IST
ஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன? நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்
எம்.எஸ்.தோனி
Vijay R | news18
Updated: July 19, 2019, 10:14 PM IST
கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெறும் முடிவு குறித்து அவரின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே விளக்கமளித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் மிகப்பெரிய விவாதமாக இருப்பது தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது தான். உலகக் கோப்பை தொடரில் தோனி மிகப் பெரிய சிறப்பான ஆட்டத்தை ஏதும் வெளிப்படுத்தவில்லை என்பதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அவர் இடம் பிடிப்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

Also Read : இந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி? தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணி வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதால் தோனி இடம்பிடிப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் தோனியின் ஓய்வை அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனியோ, பிசிசிஐ-யோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் தோனியின் நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார். “தோனியின் ஓய்வு குறித்து பல விதமான வியூகங்கள் பரவினாலும், அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. அவர் மேற்கிந்திய அணிகள் செல்லும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்“ என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: ஓய்வு குறித்து தோனியிடம் தேர்வுக் குழு பேச வேண்டும் - சேவாக்

Also Read :இளைஞர்களின் மனம் கவர்ந்த ஸ்மிருதி மந்தனாவிற்கு ஹாப்பி பர்த்டே!

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...