இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி... மீதிதான் கோலி: முன்னாள் கிரிக்கெட் வீரர்!

#MSDhoni Half A Captain, #ViratKohli Visibly Rough In His Absence: Former India Cricketer | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. #INDvAUS

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி... மீதிதான் கோலி: முன்னாள் கிரிக்கெட் வீரர்!
கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி.
  • News18
  • Last Updated: March 12, 2019, 2:50 PM IST
  • Share this:
இந்திய அணியின் பாதி கேப்டன் தோனிதான், அவர் இல்லாமல் விராட் கோலி பார்ப்பதற்கே கடினமாக முகத்துடன் இருக்கிறார் என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக போட்டியில் விளையாடி வந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தோனிக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

MS Dhoni, எம்.எஸ்.தோனி
வலைப்பயிற்சி முடிந்து புறப்படும் எம்.எஸ்.தோனி. (Twitter)ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. தோனி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டினர்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
ரன்அவுட்டை கோட்டைவிட்ட ரிஷப் பண்ட். (Twitter)


இந்நிலையில், 4-வது போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மொஹாலியில் நடந்த போட்டியில் தோனிக்கு ஓய்வு அளித்தது ஆச்சர்யமாக உள்ளது” என்றார்.

Loading...

Bishan Singh Bedi, பிஷன் சிங் பேடி
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி. (Getty Images)


மேலும், “ஸ்டம்புகளுக்கு பின்னாலும், பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட அணியின் பாதி கேப்டனாக இருக்கிறார். கேப்டன் கோலிக்கும் அவரது தேவை இருக்கிறது. தோனி இல்லாமல் அவரைப் பார்பதற்கே கடினமான முகத்துடன் இருந்தார்” என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

நாளை கடைசி போட்டி... இந்திய அணியில் என்ன மாற்றம்...?

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...