ஹிட்மேனின் சாதனையை சமன் செய்த அயர்ன்மேன்... ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்!

#MSDhoni goes level with #RohitSharma's #IPLRecord | நடப்பு சீசனில் 8 இன்னிங்சில் விளையாடி 348 ரன்களை தோனி எடுத்துள்ளார். அதில், 5 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்துள்ளார். #CSKvDC

ஹிட்மேனின் சாதனையை சமன் செய்த அயர்ன்மேன்... ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்!
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (BCCI)
  • News18
  • Last Updated: May 2, 2019, 1:04 PM IST
  • Share this:
ஐ.பி.எல் வரலாற்றில் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா சாதனையை ‘அயர்ன்மேன்’ தோனி சமன் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் 15 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சென்னை அணி, கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் குவித்தது.


Dhoni Batting CSK IPL
அதிரடி காட்டிய தோனி. (BCCI)


அடுத்துக் களமிறங்கி டெல்லி அணி, 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் அட்டகாசமாக ஸ்டம்பிங் செய்தார். பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் அசத்திய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Dhoni man of the match awards, CSK, IPL
ஆட்டநாயகன் விருது பெற்ற தோனி. (BCCI)


ஐ.பி.எல் தொடரில் தோனி இது 17-வது ஆட்டநாயகன் விருதாகும். ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்றுவர்கள் பட்டிலில் ரோகித் சர்மா 17-வது முறை விருது பெற்று முதலிடத்தில் இருந்தார். தற்போது அந்த சாதனையை தோனி சமன் செய்துள்ளார்.

நடப்பு சீசனில் 8 இன்னிங்சில் விளையாடி 348 ரன்களை தோனி எடுத்துள்ளார். அதில், 5 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்துள்ளார்.

ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading