தோனியின் கையுறையில் ராணுவ முத்திரை - பி.சி.சி.ஐ-க்கு ஐ.சி.சி அறிவுரை

தியாகம் என்று பொருள்படும் அந்த முத்திரையை தோனி பயன்படுத்திதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

தோனியின் கையுறையில் ராணுவ முத்திரை - பி.சி.சி.ஐ-க்கு ஐ.சி.சி அறிவுரை
தோனியின் கையுறை
  • News18
  • Last Updated: June 7, 2019, 12:43 PM IST
  • Share this:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ராணுவத்தின் முத்திரையை கையுறையில் பயன்படுத்தியது பலரால் பாராட்டப்பட்டாலும், அது விதிமுறைகளின் படி சரிதானா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை விக்கெட் கீப்பருமான தோனிக்கு, 2011-ம் ஆண்டு ராணுவத்தில் கவுரவ லெப்டினட் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் கையுறையில் துணை ராணுவத்தின் முத்திரை ஒன்று இடம்பெற்றிருந்தது.


தியாகம் என்று பொருள்படும் அந்த முத்திரையை தோனி பயன்படுத்திதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. எனினும், விதிமுறைகளின் படி அது சரியானதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், “தோனி ஒன்றும் போருக்குச் செல்லவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அந்த முத்திரை தோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, பிசிசிஐ-க்கு வலியுறுத்தியுள்ளது.

ஐசிசி விதிகள் என்ன சொல்கின்றன?1. வீரர்களின் தனிப்பட்ட முத்திரைகள் பேட், ஹெல்மட், ஆடை உள்ளிட்ட எதிலும் இருக்கக் கூடாது.

2. தனிப்பட்ட முறையில் யாருக்கும் செய்திகளை தெரிவிக்க வேண்டுமானால் அதற்கான முன் அனுமதியை பெற வேண்டும். (சில வீரர்கள் சதம் அடித்ததும் தனது குடும்ப புகைப்படத்தை எடுத்து முத்தமிடுவார்கள். இதுபோன்றவற்றுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்)

3. அரசியல், மதம், இனம் சார்ந்த எந்த கருத்துக்களும் உடை, பேட், ஹெல்மட் போன்றவற்றில் இருக்கக் கூடாது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading