சிட்னி மைதானத்தில் மகேந்திர சிங் தோனி ஃபீவர் பரவியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. (Image: AP)
இதனை அடுத்து, இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. ஒருநாள் தொடருக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2-வது நாளாக தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
(BCCI)
இந்நிலையில், முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, சிட்னி மைதானத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறியபோது ரசிகர்களின் அன்பால் அவர்களைச் சந்தித்தார். ஏராளமான ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். அனைவருக்கும் முகம் சுழிக்காமல் பொறுமையாக தோனி கையெழுத்திட்டார். பலர் தோனியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

சிட்னியில் ஏராளமான ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த தோனி. (Twitter)
தோனி ஆட்டோகிராப் போடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட பிசிசிஐ, ‘தோனி ஃபீவர்’ பரவியதாக கூறியுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை (ஜன.12) இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது.
பாண்டியா, ராகுலுக்கு தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.